Monday, June 29, 2015

இரண்டாம் பா - சுனாமிக் கும்மி



                    இரண்டாம் பா

சுனாமிக்கும்மி


கும்மியடி  கும்மியடி
கும்மியடி  கும்மியடி


வெட்டவெளி ஆகாயத்தில்  வட்டவடிவான பூமிப் பந்தின்
விட்டத்தடிக் கடலுக்குள்ளே பீறிட்டெழுந்திடும் சுனாமியடி
கும்மியடி    கும்மியடி
கும்மியடி    கும்மியடி


தட்டுமாறி  ஓட்டுப் பாறை சற்றுத் தூரத்தில் தள்ளிவிட
தட்டுப்பாறைத் தள்ளிக்கிளம்பி தந்திடும் சுனாமியைச் சொல்லியடி
கும்மியடி    கும்மியடி
கும்மியடி    கும்மியடி


கட்டுமீறிக் கடலெ ழுந்து முட்டிப்பிளந்திடும் மூர்க்க அலைகள்
எட்டிப்பாயும் பே ரலைகள்  நாட்டையழித்திடும் சுனாமியடி..
கும்மியடி    கும்மியடி
கும்மியடி    கும்மியடி


தட்டழிந்து தாறுமாறாய் அட்டதிக்கும் ஆர்ப்பரிக்கும்
இட்டமுடன் எட்டிப்பாய்ந்து தாக்கியழித்திடும் சொல்லியடி
கும்மியடி    கும்மியடி
கும்மியடி    கும்மியடி


கிட்டக்கிட்ட ஆழிச்சுழல்  சுருட்டியிழுக்கும் ஆழிக்குள்ளே
கட்டவிழ்த்துக் கடுவேகத்துடன் உச்சத்தில்பாயும் சுனாமியடி
கும்மியடி    கும்மியடி
கும்மியடி    கும்மியடி



கட்டுப்பாட்டை மீறிக்கடல் திட்டுமணல் ஏறிவரும்
கெட்டலைந்து ஊரையடித்து ஆழிக்கோள் காவுகள் கொள்ளுமடி
கும்மியடி    கும்மியடி
கும்மியடி    கும்மியடி


நாட்டையழித்தமூர்;க்கச்சுனாமியைப் பாட்டில் சொன்னவர்தமக்குள்ளே
ஏட்டில்வடித்துநாட்டுக்களித்தவன் பாட்டில்தீரனென்று சொல்லியடி..
கும்மியடி    கும்மியடி
கும்மியடி    கும்மியடி

கும்மியடி  கும்மியடி
கும்மியடி  கும்மியடி

                          000

No comments:

Post a Comment