முதற்பா
தீவு முழுவதும் ஆழிச்சீற்றம்.
தொகையறா
ஓ...ஓ...
சூரிய சந்திர மண்டலங்களுடன்
நல்ல மண்டலங்களுடன்..ää
சீரிய சுந்தரக் காட்சிகளுடன்
நல்ல காட்சிகளுடன்
கடற்கரை மணல் வெளிகளிலே.
நல்ல படுத்திருந்தோம்;.....
இடைக்கிடை கடல் அலைகளிலே..
நல்ல அலைகளிலே..ää
குளித்துடல் மகிழ்ந்திருந்தோம்
நல்ல மகிழ்ந்திருந்தோம்..........
ஓ...ஓ....சொல்லு
சரணங்கள்
தீவு முழுவதும் ஆழிச்சீற்றம்.
தொகையறா
ஓ...ஓ...
சூரிய சந்திர மண்டலங்களுடன்
நல்ல மண்டலங்களுடன்..ää
சீரிய சுந்தரக் காட்சிகளுடன்
நல்ல காட்சிகளுடன்
கடற்கரை மணல் வெளிகளிலே.
நல்ல படுத்திருந்தோம்;.....
இடைக்கிடை கடல் அலைகளிலே..
நல்ல அலைகளிலே..ää
குளித்துடல் மகிழ்ந்திருந்தோம்
நல்ல மகிழ்ந்திருந்தோம்..........
ஓ...ஓ....சொல்லு
சரணங்கள்
நாட்டம் பிறந்தது நாடுக ளழிந்திட
சீற்றம் பிடித்தொரு சுனாமி யழித்திட
தேட்டம் மிகுந்த தெற்குத் துறையுட்பட
நாட்டின் கரைகளில் மரணக் கறைப்பட
வாட்டிய போரால் வதங்கிக் கிடந்த
வடக்கு கிழக்கின் கரைகள் கடந்து
தாக்கி யழித்தது சுனாமித் துறையலை
மாத்தறை தொடக்கம் பருத்தித் துறைவரை
சொல்லு
பருத்தித் துறையில் சுண்டிக் குளத்தில்
உருத்தி ரம்கொண்டு கொக்கூ ரலம்பில்
திரியாய்த் துறைகட்டு வன்குச்ச வெளியும்
திருகோ ண மலை யுப்புவெளி முட்டியது
முட்டிய ழித்தது மோதிச் சாய்த்தது
சுற்றிய சுனாமி தோப்பூர் சம்பூரை
கட்டிய சீ னக் குடாவூர் துறையதை
வெட்டிப் பிளந்தது ஆழப் புதைத்தது.
சொல்லு
ஆழப் புதைந்தன கிண் ணி யாகரை
கோளப் புத்தூர் மண்ணின் வாகரை
வாழைச் சேனையு மேறா வூரும்
தாழங் குடாவும் தாவடி யூரும்
பாளைச் செட்டிக் காத்தான் குடியும்
களுதா வளையும் களுவான் குடியும்
களுவிப் பிழிந்தது சுனா மி யலையது
பளுகா மம்வரை பயங்கரம் செய்தது.
சொல்லு
பயங்கரம் செய்தது பட்டிருப் பதுவும்
ஐங்கரன் பற்றும் ஆரையம் பதியும்
கிங்கரர் கட்டிய கல்லாறுப் பாலமாம்
சங்கரஞ் செய்தது கந்தர்க் கோளமாய்
மங்காப் புகழுறு மருத முனையை
கங்குரம் பாயும் பாண்டியர் பூமியை
தங்கம் விளையும் கல்முனை நகரதை
அங்கம் சிதைத்தது வங்கக் கடலலை.
சொல்லு
வங்கக் கடலலை சாய்ந்த மருதினைத்
துங்கம் புகுந்த வெண்கக் கடையெனப்
பங்கம் பண் ணி மாளிகைக் காட்டினில்
பொங்கிப் பாய்ந்தது ஆழியில் ஆழ்த்தி
பத்தினிக் கோயில் பதிகாரை தீவைச்
சித்தில மாக்கித் தந்தது சாவை
முஸ்தபா வாய்;க்கால் முழுக்கத் தாழ்த்தி
இஸ்டமாய் வயல்களை அழித்தது ஆழ்த்தி.
சொல்லு
ஆழ்த்தி யழித்து ப்பொத்துவில் யாலத்
தாழ்நிலம் பிளக்கத் தந்துற தா ழ
ஆழ்கடல் பாய்ந்தது அம்பாந் தோட்டை
மூழ்கடித் ததின்னும் கா லிக் கோட்டை
நீள்கரை திக்வலை ஊர்களை அமிழ்த்தி
சூள்கரை மாத்தறை தங்கலை தகர்த்து
நீள்கரம் நீ ட்டிப் பேரலை புகுந்து
வாழ்வரம் அழித்தது மன்னுயிர் குடித்;தது..
சொல்லு
மன்னுயிர் குடித்தது பெந்தொட்ட பீச்சினில்
தன்னுருக் கெட்டது பேர லை வீச்சினில்
அம்பலங் கொடயை அடித்தது வீழ்த்தி
பம்பலாய்ச் சவங்கள் பிடித்தது விழுங்கி
நீள்‘pக் கடுவை நீள்ரயில் இரண்டினை
பேரலை தாக்கிப் பெட்டிகள் புரண்டன
ஓரலை எழுந்தது நீளமாய்ப் பாய்ந்தது
நீரலை ஊரெலாஞ் சூரணம் செய்தது.
சொல்லு
சூரணம் செய்தது சுனாமி புகுந்தது
காரண மாகப்ப லப்பிட்டி யுடைந்தது
பூரண மாகபே ருவளை களுத்தறை
ஊறிண நீரினில் ஊர்களின் களுத்துவரை
தாரணச் சுற்றுலா பாணந் துறையிலும்
மோதர வத்தள கல்கிஸ்ஸ வரையிலும்
நூறடி பின்னோடி முன்னோடி வந்தது.
பேரணிப் பேரலை யாழ்நகர் பாய்ந்தது
சொல்லு
யாழ்நகர் பாய்ந்தது ஆனை யிறவை
பாழ்நகர் ஆ க்கி வல்வைத் துறையை
ஊ ழிப் பேரலை ஊர்காவற் துறையை
ஆழிக் கடலில் ஆழ்த்திய தறவே
கண்டம் முறித்தது காங்கன் துறையின்
அண்டஞ் சரித்தது கோவில்த் துறையை
பண்டத் தரிப்பைச் சு வாமி மலையை
துண்டம் தறித்தது சு னாமி யலைகள்
சொல்லு
பேரலைச் சு னாமி காவுகள் கொண்டது
நீரலை மூடித் தீவுதள் ளுண்டது
ஓன்பது ரிச்டரில் இத்தனை அழிவாமோ
ஐம்பது வந்திடின் இலங்கை யிருக்குமோ
மாறிலி வேகத்தில் மரணங்கள் தந்தாய்
ஏறிநீ ஊருக்குள் ஏனோடி வந்தாய்;;
ஊழிப் பெருவினை யோபித்துப் பிடித்தோ
ஆழிக் கோளேநீ ஆயிரமூ ரழித்தாய்.
சொல்லு
ஆயிரம் ஊரழித்; தாயேநீ ஆயிரம்
மாயிரம் உயிரெடுத் தாயுன் னைப்பல்
லாயிரம் தடவை தாயென் றுசொன்ன
வாயிரம் மக்களுக் குஞ்சதி செய்தாய்.;;
சதிசெய்த காவியம் சொன்னேன் பா ரேன்.
விதிசெய்த காரிய மென்றே கூ றேன்
கவிசெய்வ திலிவன் என்னே சூ ரன்
இதுசெய்த வன்பேர் என்.ஏ. தீ ரன்.
சொல்லு
(பாட்டுக் கட்டி ஏட்டில் இட்டு மெட்டுப் போட்டுக் காட்டும்
தீரன் வாழி. ஜல். தில் ஜல் ஜக்.)
000
No comments:
Post a Comment