Monday, June 29, 2015

மூன்றாம் பா - சாய்ந்தமருது அழிந்த காதை


                         மூன்றாம் பா


சாய்ந்தமருது  அழிந்த   காதை.



என் செல்ல மகளாரேää
நான் பாடும் பாட்டினைக் கேளாயோ..
என் செல்ல மகளாரேää
நான் பாடும் பாட்டினைக் கேளாயோ..

01
இரண்டா    யிரத்து      நாலாம்     ஆண்டு
புரண்டமா    ர்கழி       இருபத் தி    யாறு
அரண்டகா   லையெட்டு   நாற்பத் தி    யாறு
திரண்டதோ  ரலை       சுனாமிய    தன்பேரு.

02.
சுனாமிய    தன்பேரு     பாய்ந்தது    மருதூரு
கனாவிலு    மதனைக்    கண்டதிலை  மகளாரு
அம்மாடி     யம்மாடி     எப்ப டிச்    சொல்லுவது
எண்ப       தடியெழுந்   தெட்டியது   பாய்ந்தது.

௦3.
பாய்ந்த     அலையின்   பயங்கரக்    காட்சி
சாய்ந்த     மருதினை    அழித்தது    தாக்கி
சூழ்ந்த      சுனாமியைப்  பாட்டினில்   வார்த்து
தேர்ந்த      தமிழினில்     ஏட்டினில்    கோர்த்து

04.
கோர்த்தெ    டுத்துக்      கோரத்தைச்  சொல்ல
ஆர்த்த      லையின்     அவலத்தைச்  சொல்ல
பார்த்த      றிந்தொரு    பாட்டினில்    சொல்ல
கேட்ட      ழுதவிழி     நீரினில்       மூழ்க..

05
மூழ்கிக்    குளித்து     நீந்திக்      களித்தே
வாழப்      பழகிய      உன்மக்     கள்மீதே
ஊழியே     நீலியே      சுனாமியே   வந்தாய்
ஆழியே     சீலியே      சீறியேன்     பாய்ந்தாய்.

௦6.
பாய்ந்தது    முதலலை    உயிர்களு மாழ்ந்தன
தா ழ்ந்த    நிலமெலாம்   தாழுண்டு மூழ்கின.
வேய்ந்த     வீடெலாம்    வேகத்திலு டைந்தன
ஆழ்ந்த     ஆழியில      ள்ளுண்டு  போயின

07.
போயின     வீடுகள ;     பேரலை     யடிபட்டு
ஆயின      தூசுகள்     மாடங்கள்    பொடிபட்டு
தாண்டிய    கடலலை    தரைகளைத்  தாக்கிற்று.
அண்டிய     பிராணிகள்   பறவைக     ளழிந்திற்று.

08.
அழிந்தன    கட்டுவலை   வள்ளங்கள்   தோணிகள்
ஒழிந்தன    கட்டுமனை   இல்லங்கள்   காணிகள்;.
ஆழ்ந்தன    திட்டுமணல்  மையித்துகள் நெருங்கின.
தாழ்ந்தன    போட்டுகள்   மதில்கள்    நொறுங்கின

09.
நொறுங்கின  கடைகள்    மரங்கள்     வீடுகள்
ஓதுங்கின    பாரிய வி    ட்டங்கள்     ஓடுகள்;
சொருகியே   தள்ளின     செத்த      வுடல்களை
பெருகியே   பாய்ந்தது    ரெண்டாம்   கடலலை

10.
கடலலை    பெருகுது    மறுபடி      வருகுது
கதறினர்     பதறினர்     கல்புகள்     உருகுது
எதுவரை    யோடுவ     தெப்படித்    தப்புவது
கடல்கரை    யுடைத்துக்   கடிதினில்    வந்தது.

11
வந்த       சுனாமி      யதுமோதி   யுடைத்திட
அழிந்த     தாயிர      மனைத்து    ம்விட்டிடப்
பறந்தனர்    பாதையில்   நெரிசலில்   முட்டினர்
இறந்தன     ரிடையினில்  வயோதிபர்   சிக்கினர்

12
சிக்கினர்     மூழ்கினர்    மற்றவ      ரோடினர்
தூக்கினர்    சாத்தினர்    விட்டவர்     தேடினர்
மாவடிப்     பள்ளிவீதி    மஹ்;ஸர்   வெளியாமோ
கூறடி       பாய்வதும்   மனிதக்      கடலாமோ

13.
கடலுக்குப்   பயந்தவர்    கார்களி     லேறினர்
இடம்விட்டு   ஓடுமுன்ன    ரிருப்பது     சுருட்டினர்
சிறுவர்கள்   கதறினர்     சிக்கியுயிர்   இழந்தனர்
ஒருவரை    யொருவர்    மயிரென    மறந்தனர்

14.
மறந்தனர்    விரைந்தனர்  வாகன      மேறினர்
சரிந்தனர்    சம்மாந்     துறைக்      கேகினர்
இழிந்தனர்   பெண்டிரைக்  கைவிட்     டோடினர்
இழிசனர்     நெஞ்சினில்   இறைவனை  மறந்தனர்.

15.
மறந்தக     ணவர்கள்    மனைவியை  இழந்தனர்
பதறிய      மனைவியர்   கணவரை    இழந்தனர்
பறந்தனர்    மழலைகள்   கைவிட்     டிழந்தனர்
உதறினர்    சொந்தங்கள்  தாமட்டும்;    பிழைத்தனர்;

16.
மட்டிலாப்    பயத்தினில்   திகைத்துச்   சிலபேர்
கட்டிட      இடிபாடு     களில்       சிக்கினர்
தட்டுமா     றி;ப்பலர்     தத்தம்      அன்பரை
விட்டிட      மனமின்றி    கட்டியே     மூழ்கினர்

17
மூழ்கினர்    பாய்ந்தது    மூன்றா      மலையதும்
ஊழ்வினை   சூழ்ந்தது    ஊரை      யழித்தது
வாழ்வினைக்  காவு       கொண்ட    கணங்களில்
வைதனர்    ஊரினில்     மீதியுள     சனங்களும்

18.
சனங்கள்    செறிந்த     காரியப்பர்   நகரதில்
சு னாமி     சீறிப்       புகுந்த      ழித்ததில்
வணங்கு     மிறையைக்   கூவிக்      கதறியே
சனங்கள்    சவங்க      ளாகிச்      சிதறியே

19
சிதறினர்     கடற்கரை    வாசிகள்     மீனவர்
பதறிய      மழலைச்    சிறுசுக      ளானவர்
மிதந்ததைக்  கண்டவர்    உயிர்காத்து  மீண்டனர்
அமிழ்ந்தனர்  ஆழியில்    ஆள்மாறி    மாண்டனர்

20
மாண்டனர்  தோணாத்    தொங்கலி லிருந்தவர்
கண்டனர்   ஓரலை      உச்சி    மீறிவரக்
கண்டவர்   விண்டிலர்    விண்டவர்  கண்டிலர்
என்பவர்    போலவர்    அக்கணம்  மரித்தனர்

21.
மரித்த      சிறுசுகள்;    கண்டசி     லபெண்டிர்
சிரித்தனர்    பயத்தால்    சித்தமி      ழந்தனர்
உரிந்த      புடவையும்   மறந்த      நோயவர்
விரிந்த      தலையுடன்   விசருத்      தாயவர்

22.
தாயவர்     தந்தவ      முதுண்டு    ஓதப்பள்ளி
சேயவர்     போயினர்    மூழ்குண்டு   மீளாப்பள்ளி
தாயவர்     பதறினர்     பைத்திய    மாயினர்
தூயவர்     சிறுவ       ரள்ளுண்டு   போயினர்.

23.
போயினர்    இன்னும்     மல்ஹருஸ்   ஷஸம்ஸில்
சேயினர்     தொங்கினர்   கூரையி     னுச்சியில்;
ஏங்கினர்     ஓடினர்      பட குத்     துறையதும்
தாங்கிய     பாலமும்     தறிபட்டு     முறிந்ததை

24.
முறிந்ததைக்  கண்டனர்    தோணாத்    திடலில்
மிதந்ததைக்  கண்டனர்    மீனவ       ருடல்கள்
சரிந்தது     அல்ஜலால்   மாணாக்     குவி யல்
தெரிந்தது    பள்ளிமா    ணவிக      ளுடல்கள்

25.
உடல்கள்    றியாலுல்   ஜன்னாப்      பள்ளியுடன்
கடலுள்     மறைந்த    காலக்       கொடுமை
வைத்திய    சாலையும்   றிஸ்வி      டொக்டரும்
விவசாயக்   கந்தோரும்   ஒஸ்மன்     வீ தியும்.

26.
ஒஸ்மன்     வீதியில்     வீடுகளை    முறித்துப்
பஸ்ப       மாக்கிப்     பாடாய்ப்    படுத்தி
சாஹிpறா     வீதியில்   ச வங்கள்    தள் ளி
ஆஹிறம்     அழித்;துப்    பாய்ந்தது    சு னாமி

27.
பாய்ந்தது    கலியாண    ரோட்டு    வரையிலும்
சாய்ந்தம    ருதூரைப்   போட்டுக்    குதறியே
நூற்றுக்     கணக்கினில்  போட்டுக்    களள்ளி
தீற்றித்      திணித்தது   மோட்டு     வளைகளில்;

28
மோட்டு     வளைகளை  மோதிவி;     ழுத்தி
ரோட்டு      முழுக்கவும்   போட்டுக்    குதறி;
மார்க்கட்    ரோட்டும்    மக்கள்      கடையும்
மூர்க்கச்     சு னாமி     மோதிக்     குடைந்து

29.
மோதிக்     குடைந்தது   பாளிகா     ரோட்டை
பாதியு      டைத்தது    மாளிகைக்   காட்டை
எட்டிப்      பாய்ந்தது    பொம்பிளச்   சந்தை
வெட்டிப்     பிளந்த      வேகத்தில்   கந்தை

30.
கந்தை      யாச்சுது     பீச்சுக்      கோட்டலும்
சங்கம்      சேர்ந்த      மீனவர்      கோட்டமும்
கடலோ     ரங்கட்டிய    ஹுஸைன்  வித்தியமும்
கடலோ     டுபோச்சுது   அந்தோ     பரிதா பம்.

31
பரிதா       பம்மிஞ்சி    எதுவு       மில்லை
கடலோ     ரம்வாழ்ந்    ததடமு      மில்லை
பாளிகா     முதலாய்    மாளிகா     வீறாய்;
ஆழிய      யடித்த      தத்தனையும்  தூளாய்.

32.
தூளான     ஊரான    தே யென    வழுது
ஆளாள்     அறியா     மலைந்த    பொழுது
ஓங்கியொ    ருபாங்கின்   சத்தம்      கேட்டினர்
சாய்ந்த     மருதூர்     பள்ளியை    நா டினர்

33.
நாடினவன்   செய்தனன்   நாமெந்த    மட்டுக்கு
ஓடித்தப்பி    யவரார்     ம ரணம    தைவிட்டு
வேடிக்கை   மனிதரே     வேகத்தை   விடுங்கள்
நாடிக்கை    யேந்தியிறை  பாதத்தில்    வீழுங்கள்.

34.
வீழுங்      களிறை     பள்ளியில்    தொழு து
கேளுங்     களிறை     வனிட       மழு து
எங்க       ளிறைவனே   ஏகப்பெரும்   பொருளே
தங்க       நபிகளைத்   தந்தபரம்    பொருளே.

35.
பொருளும்   பொன்னும்   அளித்      தவன்நீ
உயிரும்     உடலும்     அளிப்      பதும்நீ
அருமை     நபிகள்      ரஸ_லின்    பொருட்டால்
சீறும்  சு    னாமியைத்   தணித்தருள்  அல்லாஹ்

36.
அல்லாஹ்  வருளது     சுனாமி      தணிந்தது
எல்லா      வழியிலும்   ஆழிதி      ரும்பியது
எந்த       இடத்திலு    மையித்துக்   குவிந்தது
வந்த       வரத்தினில்   பள்ளிநி     றைந்தது.

37.
நிறைந்த    வுடலெலாம்  பெண்களும்  சிறுவரும்
குறைந்த    அளவினில்   ஆண்களும்  தவிரவும்
அங்க       வீனர்களும்   அதிகம்    இருந்தனர்
எங்கு       மடுக்கிப்     பள்ளி      நிறைந்தன.

38.
நிறைந்த    உடல்களை  அடையாளம்   கண்டு
விரைந்து    குளிப்பாட்    டிக்கபனு      மிட்டு
தரைகள     தோண்டும்   வாகனம்     கொண்டு
விரைந்து    கபுறுகள்     தோண்டி     அடக்கி..

39.
அடக்கத்     தலங்களும்   அழிந்து     போனதில்
அடக்கினர்   வளவெலாம்  நூற்றுக்     கணக்கில்
அடங்க     வில்லை     பள்ளியும்    குறைக்கு
அடக்க      வனுப்பினர்   சம்மாந்     துறைக்கு.

40
சம்மாந்     துறையில்  மலையடிக்   கிராமம்;
எம்மாத்     திரந்தான்  கபுரடிக்      கம்பம்.
ஆயிரக்     கணக்கில்  மையித்துக்   கும்பம்
சாய்ந்த     மருதினில்  மட்டுமூ      வாயிரம்

41.
ஆயிரம்     அழுகுரல்    ஆரையார்   தேற்றிவிட
ஆயிரம்     அவலங்கள்  ஆரிடமார்    கூறிவிட
எத்தனை    பாவங்கள்    செய்தமோ   இப்பேரழிவு
இத்தனை    காலமும்    எமக்கில்லை  இச்சீரழிவு

42.
சீரழி       வில்லை     சீவராசி     பலதுக்கு
ஓர்நாழி     முன்னமே    உள்ளறி     வதற்கு
பேரழி      வருமென்    றுணர்வா    லறிந்தன
ஓராழி      வருமென்று   ஓடோடித்    தப்பின

43.
தப்பின      பறப்பன     நடப்பன     கணக்கின்றி
அப்பின      ஊர்வன     வாயிரக்     கணக்கினில்
கட்டின      பிராணிகள்   தப்பமுடி     யவில்லை
பூட்டின      பறவை ப    றக்கமுடி     யவில்லை

44.
இல்லை     நுண்ணறி    வாறறிவு     மாந்தரும்
இல்லிடம்    தேடினர்     ஓடினரங்     கிங்கணும்
இல்லை     யொரு      பொருளும்   மாய்ந்தனர்
அல்லா      அல்லா     எனக்கத்திக்  காய்ந்தனர்

45.
காய்ந்த     வெய்யிலில்  மாவடிப்     பள்ளியில்
சாய்ந்து     கிடந்தனர்    மாய்ந்து     மயங்கினர்
மெய்யோ    விதுவோ    வாழிடமோ   கிளியே..
ஐயோ      விதியோ     ஆருசெய்    தபழியோ..

46.
செய்த      பழியே து    மில்லை     கிளியே
செய்ய      நினைத்     தவன்செய   லிதுவே
வையத்     தினர்க்கு     வல்லவன்    வே தம்
ஐயம்       திரிபறச்     சொல்லும்   பா டம்..

47.
பாடம்      படித்த      பாலர்மு     தற்கொண்டு
பாடம்      மறந்த      பாட்டியர்    வரையீண்டு
அபயம்     தந்தது      சம்மாந்     துறைதான்
உபயம்     தந்ததும்     எம்மாத்     திரந்தான்.

48.
எம்மாத்     திரம்       சனத்       திரளுக்கும்
அம்மாத்     திரம்       சாப்பா      டளித்தும்
தம்மாந்     தரைப்      போலத்      தவித்தனர்
சம்மாந்      துறை       மக்களு     த வினர்

49.
உதவினர்    சாய்ந்த     மருதுக்     கோடிவந்து
உறவினர்    போலவர்    எம்மைத்    தேடிவந்து
சிதைவுகள்   கண்டனர்    சித்தம்      நடுங்கினர்
முதல்வேலை மையித்து    களப்புறப்    படுத்தினர்

50.
அப்புறப்     படுத்தினர்    டிப்பரி      லேற்றினர்
துப்புரவு     செய்தனர்    துணிக்கப    னிட்டனர்.
தொண்டர்    குவிந்தனர்   தோண்டி     முடித்தனர்
அண்டம்     குலுங்கிட    அறபியி;     லோதினர்

51.
ஓதிய       சேதிகள்     உலகினில்   ஒலித்தன
மோதிய     சுனாமிமு    கத்திலு      மிழ்ந்தன.
ஓடியே      வந்தன      ஊடகப்     பாயிரம்
தேடியே     பரப்பின     செய்திக     ளாயிரம்.

52.
ஆயிரம்     சேதிகள்     சுடச்சுடத்    தந்தனர்
ஆயிரம்     மின்னணு    ஊடகத்     துறையினர்
கண்டனர்    தொலைக்காட்சிவானொலி   விமர்சனம்
இன்டனெ    ட்டிலும்      நேரடித்      தரிசனம்.

53.
தரிசனம்     காணாமற்   தேடித்      தே டி
புரிசனெங்    கேடிபிள்     ளையெங்    கே டி
இனசன      மெங்கேடி    கண்ட வி    டங்கூறடி
ஒருசனம்    அறிமுக     மில்லேடி      நேரடி

54.
நேரடித்     தரிசனம்     உறவுகள்    உபகாரம்
கேளடி      கண்மணி    அருமை     மகளாரே
ஓட டி      தேட டி     எங்கோடிப்   போயினர்
ஓடோடித்    தேயாடிப்    பேயாடிப்    போயினர்;.

55.
பேயாடிப்    போயிற்     றுச்சுனா     மி யலை
ஈயாடிப்     போயிற்     றுத்தீராக்    க வலை
பாராளும்    மன்னரும்    மற்றோரும்   வருகுவர்
தாராளம்    பேசுவர்      வேறென்ன   செய்குவர்

56.
செய்தனர்    படையின    ருதவிக     ளாயிரம்;
அரசினர்     அனுப்பினர்   உணவுக    ளாயிரம்
வந்தனர்     பண்ணாட்டுத்தொண்டர்     நிறுவனம்
தந்தனர்     உடைகள்    மருந்துக    ளாயிரம்.

57.
ஆயிரம்     கம்பளி     கள்மாத்     திரைகள்
நோய்நீ     க்கிமருந்    துகள்       நாசினிகள்
இன்னும்     எத்தனை    யோவிதப்    பொருட்கள்
பின்னும்     குவிந்தன    பன்னாட்     டுதவிகள்

58.
உதவிக     ளாயிரம்     குவிந்த    போதிலும்
பதவியி     லுள்ளோர்   பகிர்ந்த     போதிலும்
இதயமி     னித்தவர்     மீண்டு      வருவரோ
கதையா     னவாழ்வை   மீளத்       தருவரோ..

59.
தருவது     மெல்லா     மவனது     செயல்தான்
வந்ததும்    போனதும்    அவனது     அருள்தான்.
எந்தவி      றைவனை    ஒப்புக்      கொண்டமோ
அந்தவி     றைவனே    அழித்துக்    காப்பதும்

60.
அழித்துக்    காப்பதில்    போதனை    பெற்றோம்
விழித்து     எழுவோம்    வேதனை    விட்டோம்
சோதனை    வெல்வோம்  சாதனை     செய்வோம்
சாய்ந்த     மருதினை    மீளவும்      கட்டுவம்

61.
கட்டுவம்     வீ டுகள்     கடைகள்    கண்ணிகள்
வெட்டுவம்   வாய்க்கால்   பாலங்கள்    தோணிகள்;
நட்டுவம்     பச்சைகள்    நாட்டுப்புற   காய்கறிகள்
எட்டுவம்     எங்களது    ஏற்றமிகு    லட்சியங்கள்

62.
லட்சியம்    கொள்ளுவம்  கல்விகள்   வளர்;ப்பம்
உச்சி       மேடெல்லாம் களனிகள்   செய்குவம்
உள்ள      விடமெல்லாம் கணணிக   ளாக்குவம்
அல்லா     உதவியால்   அகிலங்க   ளாளுவம்.

63..
அகிலங்     களழித் த    சுனா மிப்    பாட்டை
அகிலத்     தோருக்     கும்பாடிக்    காட்ட
அருளிச்     செய்தான்    அல்லாஹ்  பெரியன்
அகிலப்     புகழுக்கு    மவனே      உரியன்

64.
அவனே     உரியவன்    அனைவர்    பாட்டுக்கும்
என்னே      தீ ரன்      இணையார்   ஈட்டுக்கு
இவனே      உரியவன்    சுனாமிப்     பாட்டுக்கு
என்.ஏ.      தீ ரன்      ஆனேன்     ஏட்டுக்கு.

65.
ஏட்டுக்      கடங்கா     எழுத்தில்    முடியா
பாட்டுக்     கடங்காப்    பாடியி      முடியா
மட்டுக்      கடங்கா     மரணப்      பினாமி
கட்டுக்      கடங்கா     ஆழிச்      சுனாமி.

              66.
ஆழிச்சு     னாமியால்   வந்த       அழிவை
பாடிச்சு      மைகுறை    ந்தேன்      மகளே..
ஏந்தியி      ருகரம்      என்றுமி     றையிடம்
கேளடி      கேளடி      கண்ணீரு    மேனடி..

67.
கண்ணீர்     துடைப்பாய்  க வலை    விடுவாய்
தண்ணீர்     ஆழ்ந்த     ஆத்மா      நினைப்பாய்
கண்ணின்    மணியாம்    ரஸ_லின்    மகளாம்
அன்னை     பாத்திமா    வழியில்     நடப்பாய்.

68.
நடப்ப      வர்நபிவழி   நல்லவரும்   வாழ்க
படைத்த     இறையவன்   சொற்படி    வாழ்க.
வடித்த      கா வியம்    கேட்டவர்    வாழ்க.
படித்தவர்    பார்த்தவர்    யாத்தவரும்  வாழ்க.



என் செல்ல மகளாரேää
நான் பாடும் பாட்டினைக் கேளாயோ..
என் செல்ல மகளாரேää
நான் பாடும் பாட்டினைக் கேளாயோ..


             (காவியம் முற்றிற்று.)

இரண்டாம் பா - சுனாமிக் கும்மி



                    இரண்டாம் பா

சுனாமிக்கும்மி


கும்மியடி  கும்மியடி
கும்மியடி  கும்மியடி


வெட்டவெளி ஆகாயத்தில்  வட்டவடிவான பூமிப் பந்தின்
விட்டத்தடிக் கடலுக்குள்ளே பீறிட்டெழுந்திடும் சுனாமியடி
கும்மியடி    கும்மியடி
கும்மியடி    கும்மியடி


தட்டுமாறி  ஓட்டுப் பாறை சற்றுத் தூரத்தில் தள்ளிவிட
தட்டுப்பாறைத் தள்ளிக்கிளம்பி தந்திடும் சுனாமியைச் சொல்லியடி
கும்மியடி    கும்மியடி
கும்மியடி    கும்மியடி


கட்டுமீறிக் கடலெ ழுந்து முட்டிப்பிளந்திடும் மூர்க்க அலைகள்
எட்டிப்பாயும் பே ரலைகள்  நாட்டையழித்திடும் சுனாமியடி..
கும்மியடி    கும்மியடி
கும்மியடி    கும்மியடி


தட்டழிந்து தாறுமாறாய் அட்டதிக்கும் ஆர்ப்பரிக்கும்
இட்டமுடன் எட்டிப்பாய்ந்து தாக்கியழித்திடும் சொல்லியடி
கும்மியடி    கும்மியடி
கும்மியடி    கும்மியடி


கிட்டக்கிட்ட ஆழிச்சுழல்  சுருட்டியிழுக்கும் ஆழிக்குள்ளே
கட்டவிழ்த்துக் கடுவேகத்துடன் உச்சத்தில்பாயும் சுனாமியடி
கும்மியடி    கும்மியடி
கும்மியடி    கும்மியடி



கட்டுப்பாட்டை மீறிக்கடல் திட்டுமணல் ஏறிவரும்
கெட்டலைந்து ஊரையடித்து ஆழிக்கோள் காவுகள் கொள்ளுமடி
கும்மியடி    கும்மியடி
கும்மியடி    கும்மியடி


நாட்டையழித்தமூர்;க்கச்சுனாமியைப் பாட்டில் சொன்னவர்தமக்குள்ளே
ஏட்டில்வடித்துநாட்டுக்களித்தவன் பாட்டில்தீரனென்று சொல்லியடி..
கும்மியடி    கும்மியடி
கும்மியடி    கும்மியடி

கும்மியடி  கும்மியடி
கும்மியடி  கும்மியடி

                          000

முதற் பா - தீவு முழுவதும் ஆழிச் சீற்றம்

முதற்பா

தீவு முழுவதும் ஆழிச்சீற்றம்.




தொகையறா


ஓ...ஓ...
சூரிய சந்திர மண்டலங்களுடன்
நல்ல மண்டலங்களுடன்..ää
சீரிய சுந்தரக் காட்சிகளுடன்
நல்ல காட்சிகளுடன்

கடற்கரை மணல் வெளிகளிலே.
நல்ல படுத்திருந்தோம்;.....

இடைக்கிடை கடல் அலைகளிலே..
நல்ல அலைகளிலே..ää
குளித்துடல் மகிழ்ந்திருந்தோம்
நல்ல மகிழ்ந்திருந்தோம்..........
ஓ...ஓ....சொல்லு






சரணங்கள் 



நாட்டம்     பிறந்தது     நாடுக      ளழிந்திட
சீற்றம்      பிடித்தொரு   சுனாமி      யழித்திட
தேட்டம்     மிகுந்த      தெற்குத்     துறையுட்பட
நாட்டின்     கரைகளில்   மரணக்      கறைப்பட

வாட்டிய     போரால்     வதங்கிக்    கிடந்த
வடக்கு      கிழக்கின்    கரைகள்     கடந்து
தாக்கி      யழித்தது    சுனாமித்     துறையலை
மாத்தறை    தொடக்கம்   பருத்தித்     துறைவரை

சொல்லு


பருத்தித்     துறையில்    சுண்டிக்     குளத்தில்
உருத்தி     ரம்கொண்டு  கொக்கூ     ரலம்பில்
திரியாய்த்    துறைகட்டு   வன்குச்ச    வெளியும்
திருகோ     ண மலை    யுப்புவெளி   முட்டியது


முட்டிய     ழித்தது      மோதிச்     சாய்த்தது
சுற்றிய      சுனாமி      தோப்பூர்    சம்பூரை
கட்டிய      சீ னக்      குடாவூர்    துறையதை
வெட்டிப்     பிளந்தது    ஆழப்       புதைத்தது.

சொல்லு


ஆழப்       புதைந்தன   கிண் ணி    யாகரை
கோளப்     புத்தூர்      மண்ணின்   வாகரை
வாழைச்     சேனையு    மேறா      வூரும்
தாழங்      குடாவும்     தாவடி      யூரும்

பாளைச்     செட்டிக்     காத்தான்    குடியும்
களுதா      வளையும்    களுவான்    குடியும்
களுவிப்     பிழிந்தது    சுனா மி     யலையது
பளுகா      மம்வரை    பயங்கரம்    செய்தது.

சொல்லு


பயங்கரம்    செய்தது     பட்டிருப்     பதுவும்
ஐங்கரன்    பற்றும்      ஆரையம்    பதியும்
கிங்கரர்     கட்டிய      கல்லாறுப்    பாலமாம்
சங்கரஞ்     செய்தது     கந்தர்க்     கோளமாய்

மங்காப்     புகழுறு      மருத       முனையை
கங்குரம்     பாயும்      பாண்டியர்    பூமியை
தங்கம்      விளையும்    கல்முனை    நகரதை
அங்கம்     சிதைத்தது   வங்கக்       கடலலை.

சொல்லு


வங்கக்      கடலலை    சாய்ந்த     மருதினைத்
துங்கம்      புகுந்த      வெண்கக்    கடையெனப்
பங்கம்      பண் ணி    மாளிகைக்   காட்டினில்
பொங்கிப்    பாய்ந்தது    ஆழியில்    ஆழ்த்தி

பத்தினிக்    கோயில்     பதிகாரை    தீவைச்
சித்தில      மாக்கித்     தந்தது      சாவை
முஸ்தபா    வாய்;க்கால்   முழுக்கத்    தாழ்த்தி
இஸ்டமாய்   வயல்களை   அழித்தது    ஆழ்த்தி.

சொல்லு


ஆழ்த்தி     யழித்து     ப்பொத்துவில்  யாலத்
தாழ்நிலம்    பிளக்கத்     தந்துற      தா ழ
ஆழ்கடல்    பாய்ந்தது    அம்பாந்     தோட்டை
மூழ்கடித்     ததின்னும்    கா லிக்     கோட்டை

நீள்கரை     திக்வலை    ஊர்களை    அமிழ்த்தி
சூள்கரை    மாத்தறை    தங்கலை    தகர்த்து
நீள்கரம்     நீ ட்டிப்      பேரலை     புகுந்து
வாழ்வரம்    அழித்தது    மன்னுயிர்    குடித்;தது..

சொல்லு


மன்னுயிர்    குடித்தது    பெந்தொட்ட  பீச்சினில்
தன்னுருக்    கெட்டது     பேர லை    வீச்சினில்
அம்பலங்    கொடயை    அடித்தது    வீழ்த்தி
பம்பலாய்ச்   சவங்கள்    பிடித்தது     விழுங்கி

நீள்‘pக்     கடுவை     நீள்ரயில்     இரண்டினை
பேரலை     தாக்கிப்     பெட்டிகள்    புரண்டன
ஓரலை      எழுந்தது    நீளமாய்ப்    பாய்ந்தது
நீரலை      ஊரெலாஞ்   சூரணம்     செய்தது.

சொல்லு


சூரணம்     செய்தது     சுனாமி      புகுந்தது
காரண      மாகப்ப     லப்பிட்டி     யுடைந்தது
பூரண      மாகபே     ருவளை     களுத்தறை
ஊறிண     நீரினில்     ஊர்களின்    களுத்துவரை

தாரணச்     சுற்றுலா     பாணந்      துறையிலும்
மோதர      வத்தள      கல்கிஸ்ஸ   வரையிலும்
நூறடி      பின்னோடி    முன்னோடி   வந்தது.
பேரணிப்     பேரலை     யாழ்நகர்    பாய்ந்தது

சொல்லு


யாழ்நகர்    பாய்ந்தது    ஆனை      யிறவை
பாழ்நகர்     ஆ க்கி     வல்வைத்    துறையை
ஊ ழிப்     பேரலை     ஊர்காவற்   துறையை
ஆழிக்      கடலில்      ஆழ்த்திய    தறவே

கண்டம்     முறித்தது    காங்கன்     துறையின்
அண்டஞ்    சரித்தது     கோவில்த்    துறையை
பண்டத்     தரிப்பைச்    சு வாமி     மலையை
துண்டம்     தறித்தது     சு னாமி     யலைகள்

சொல்லு


பேரலைச்    சு னாமி     காவுகள்     கொண்டது
நீரலை      மூடித்       தீவுதள்      ளுண்டது
ஓன்பது      ரிச்டரில்     இத்தனை    அழிவாமோ
ஐம்பது      வந்திடின்    இலங்கை    யிருக்குமோ

மாறிலி      வேகத்தில்   மரணங்கள்   தந்தாய்
ஏறிநீ       ஊருக்குள்   ஏனோடி     வந்தாய்;;
ஊழிப்      பெருவினை  யோபித்துப்   பிடித்தோ
ஆழிக்      கோளேநீ    ஆயிரமூ     ரழித்தாய்.

சொல்லு


ஆயிரம்     ஊரழித்;     தாயேநீ     ஆயிரம்
மாயிரம்    உயிரெடுத்   தாயுன்      னைப்பல்
லாயிரம்     தடவை      தாயென்     றுசொன்ன
வாயிரம்     மக்களுக்    குஞ்சதி     செய்தாய்.;;

சதிசெய்த    காவியம்    சொன்னேன்  பா ரேன்.
விதிசெய்த   காரிய      மென்றே     கூ றேன்
கவிசெய்வ   திலிவன்     என்னே      சூ ரன்
இதுசெய்த   வன்பேர்     என்.ஏ.      தீ ரன்.

 சொல்லு



            (பாட்டுக் கட்டி ஏட்டில் இட்டு மெட்டுப் போட்டுக் காட்டும் 
                     தீரன் வாழி. ஜல். தில் ஜல் ஜக்.)

                                      000




காவியம்- காப்பு

           பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.



~சுனாமி| கடற்கோள் காவியம்.

‘தீரன்.’ ஆர்.எம். நௌஸாத்.







2004.12.26 ம் திகதிää காலை 9.00 மணியளவில் 
இந்தோனேசியக் கடலில்
ஏற்பட்ட புவியதிர்வு காரணமாக உருவான இராட்சத சுனாமி அலைகள் தென்கிழக்காசிய நாடுகளைத் தாக்கிää சுமார் இரண்டு இலட்சம் மக்களைக் கொன்றொழித்துää இலங்கையில் ஏறக்குறைய நாற்பத்திரண்டாயிரம் பேரைப் பலியெடுத்துää இலங்கையின் கரையோரப் பகுதிகளையும் பாரிய அழிவுக்குள்ளாக்கியது. இக் கடற்கோள் அனர்த்தம் காரணமாகää இயற்றப்பட்ட~சுனாமி| கடற்கோள் காவியம் இது.




காப்பு.



சோதிமுதல்  ஓதும்பொருள் ஆதிபுகழ்    ஞாலமெல்லாம்
ஆதியிறை  ஏகபொருள்  வாரியிறை  ஞானமெல்லாம்
ஆதிமுதல்   ஈதுவரை    மீதியுள     காலமெல்லாம்
மேதியினில் சோதிபுகழ் ஓதிடுவேன் உள்ளமெலாம்.




ஸலவாத்.


முழுமதி      பொழியொளிர் எழில்  முகமது
இறைவழி    ஓழுகிடும்    நபி   முஹமது
திருநபி      மொழிவழி    தனில் அகமது
மொழிகிற    நபிபுகழ்     தனி   லுருகிடும்.



அவையடக்கம்.



முன்னோர்தமை     பின்பற்றி          ஒருகாவியம்
என்.ஏ. தீரன்       பேர்தாங்கி         தமிழோவியம்
வண்ணமுறத்       தீட்டுகிறேன்        இதுகாவியம்.
எண்ணுகிறேன  ;    ஏகனிறை          இதுகாரியம்.


யாப்பறியேன்       நவ்ஸாத்          காரியப்பர்நான்
ஏர்ப்படைசூழ       ஏருழவரை         நேரியவாட்சி
ஓர்ப்படச்செய்த      மீர் ராஸிக்         காரியப்பர் தன்
  பொற்புடைமாது    ஹாஜரா நல்      மாதுசிரோண்மணி
மூத்தபுதல்வன்       பிதற்றலிது        பொறுத்தருள்வீர்.





சமர்ப்பணம்.




கரையுடைத்துக் கடல்பொங்கித் தரை கடந்து தாவி வர
துறைகடந்து விரைந்தேகிய சாய்ந்தமருது மக்களை
அரவணைத்து ஆதரவளித்த
சம்மாந்-துறை மக்கள் தமக்கே அர்ப்பணம் இந்நூல்.




உள்ளுறை



இரண்டா யிரத்தோர் நான்கா மாண்டுபதின் இரண்டா மாதமீர்
பத்தாமாறாம்நாளில் உருண்ட பூமியோர திர்வால் ஆழிபொங்கித்
திரண்டதால் தீவும்ää எமதூரு மழிந்தமை.
2004.12.26.
00



முதற்பா:-     தீவு முழுவதும் ஆழிச் சீற்றம்.

இரண்டாம் பா:- சுனாமிக் கும்மி.

மூன்றாம் பா:-  சாய்ந்தமருது அழிந்த காதை.